தைப்பூசம்: பழனியில் இன்று கொடியேற்றம்
Subscribe to Oneindia Tamil
பழனி:
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன்வியாழக்கிழமை துவங்குகிறது.
தைப்பூச விழா இந்த மாதம் 7-ம் தேதி நடக்கிறது. தைப்பூசம் அனைத்து முருகன்திருத்தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பழனி முருகன்கோயிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூச திருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்குமேல் 8.30 மணிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கொடியேற்றம்பெரிய நாயகியம்மன் கோயிலில் நடக்கும்.
தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடக்கும். இந்த 10 நாட்களும் கலை நிகழ்ச்சிகள்விமரிசையாக நடைபெறும்.












Click it and Unblock the Notifications