கனடாவில் நிதிவசூல்
டோரான்டோ:
கனடாவில் வாழும் பல்வேறு நாட்டவர்களும், இனத்தவர்களும் அங்கு வாழும் இந்தியர்களுடன் ஒன்றிணைந்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்மக்களுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்கோர்போரோவிலுள்ள யீ காங்க் சீன ஆலோசனை மையத்தில் நடந்த பத்திரிக்கைக் கூட்டத்தில் சீன ஆலோசனை மைய தலைவர் ஜோசப் வோங்கூறுகையில், யீ காங்க் ஆலோசனை மைய ஊழியர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களிடமிருந்து 10, 000 கனடியன் டாலர்கள் வசூலித்துக் கொடுக்கத்திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஆலோசனை மையத்தில் சீனர்கள், ஜப்பானியர்கள், கொரியர்கள், தெற்காசியர்கள், கிரீக் நாட்டவர், ஈரானிய இனத்தவர் ஆகியோர் உள்ளனர்.அவர்களிடம் நிதி வசூலிக்கத் தீர்மானித்துள்ளோம்.
மேலும் கனடாவில் வசித்து வரும் சீனர்கள் குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனடாசெஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் இரண்டு பேர், 600 கனடிய டாலர்கள் மதிப்புள்ள காசோலையை குஜராத் நிவாரண நிதிக்காக அளித்துள்ளனர்.
வானொலி, தொலைக்காட்சி மூலம் பிரச்சாரம் செய்து நிதி வசூல் செய்யும் பணி கனடாவில் முழு வீச்சில் நடந்து வருகிறது. கனடாவில் வாழும்மக்களிடம் வசூலிக்கப்படும் பணத்தில் 15 சதவீதம் கனடா நாட்டின் பல அத்தியாவசிய செலவுகளுக்காக வைத்துக் கொள்ளப்படும். மீதி பணம்இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநில நிவாரணத்திற்கு அளிக்கப்படும் என்றார்.
கனடாவிலுள்ள சர்வதேச மகாவீர் ஜெயின் மிஷன் தலைவர் ஹரீஷ் ஜெயின் கூறுகையில், நாங்கள் வசூல் செய்யும் பணத்தை நேரடியாக இந்தியாவுக்கு அனுப்பிவைப்போம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications