வளர்த்த மாடு முட்டி விவசாயி பலி
ஆந்திரத்தில் அவ்வப்போது, நக்சலைட்டுகள் பெரும் அட்டூழியங்களைச் செய்கிறார்கள்; கொலைகள் நடக்கின்றன.போலீஸ் நடவடிக்கையில் சிலர் இறந்தால் - உடனே மனித உரிமைக்கழகங்கள் களத்தில் இறங்கி,நக்சலைட்டுகளின் சார்பில் உரிமைக் குரல் எழுப்பி, போலீசாரின் செயல்பாட்டை முடக்க முயற்சிக்கின்றன. இங்கேநக்சலைட்டுகளின் கொலை வெறி, மனித உரிமையாகிறது.
காஷ்மீரில் தொடர்ந்து நடக்கிற, பிரிவினைவாதிகளின் அரஜாகத்தை ஒடுக்க ராணுவம் முனையும் போதெல்லாம்,ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்தவர்களைச் சுட்டிக் காட்டி, மதச்சார்பின்மைவாதிகள் கண்டனக் குரல்எழுப்புகிறார்கள். இங்கே பயங்கரவாதத்திற்கு ஆதரவு என்பது மதச்சார்பின்மையாகிறது.
தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும், நாட்டு ஒற்றுமைக்கு எதிராகவும் செய்யப்பட்டு வரும் பிரச்சாரத்தைகண்டித்தால், தமிழ்த் துரோகி பட்டம் சூட்டப்படுகிறது; இங்கே தேச விரோத சக்திகளுக்கு தரப்படுகிற ஆதரவு -தமிழ்ப்பற்று ஆகி விடுகிறது.
இவை ஒருபுறமிருக்க, மற்றொரு புறத்தில் மாருதி நிறுவனத்தில் நான்கு மாத வேலை நிறுத்தம்; தொலைத் தொடர்புஊழியர்கள் வேலைநிறுத்தம்: தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்; பாங்கு ஊழியர்கள் வேலை நிறுத்தம்... என்றுபொருளாதாரத்தை நசுக்குகிற செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படி நாட்டின் முன்னேற்றத்திற்குவிளைவிக்கப்படுகிற கேடு, தொழிலாளர் உரிமையாகிறது.
ஆக, ஜனநாயகம், மாநில உரிமை, மனித உரிமை, மதச்சார்பின்மை, தொழிலாளர் உரிமை - என்கிற எல்லாதத்துவங்களுமே அமைதியைக் குலைப்பதற்கும், பொருளாதாரத்தை முடக்குவதற்குமே பயன்படுகின்றன.
துரதிர்ஷ்டவசமாக, இந்த மாதிரி வக்ர வாதங்களுக்கு பத்திரிக்கைகளின் ஆதரவும் பெருமளவில் கிட்டி விடுகிறது.விளைவு - அரசு செயலாற்றுப் போகிறது.
ஜனநாயகம் என்பது. கும்பல் நாயகமாகமவும், கூக்குரல் நாயகமாகவும் மாறி வருவது, எதிர்காலத்திற்கு நல்லதல்ல.பெருமவாரியான மக்கள் இந்த மாதிரி ஜனநாயகத்தை ஆதரிக்கவில்லை.
அதைப் புரிந்து கொண்டு, ஆட்சியாளர்கள், ஒழுங்கு முறையை நிலை நாட்டுவதில் தயை, தாட்சண்யம்,தயக்கமின்றி நடந்து கொண்டால், அதற்கு மக்கள் ஆதரவும் கிட்டும்; உண்மையான ஜனநாயகமும் நிலை பெறும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications