வளர்த்த மாடு முட்டி விவசாயி பலி
இம்மாதம் 15-ம் தேதியன்று பீஹாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் நடத்திய பொதுக் கூட்டத்தில்,வன்முறையாளர்கள் புகுந்து,கண்மூடித் தனமாக தாக்கியதன் விளைவாக - ஏழு பேர் இறந்திருக்கிறார்கள்; 15 பேர்காயமுற்றார்கள்.
பா.ஜ.க. தலைவர் ஒருவரும், இறந்தவர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்.அப்பாவி மக்களும் பலியாகிஇருக்கிறார்கள். பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக நடந்த பொதுக் கூட்டத்தில் இந்தக் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
இந்த மாதரி கொலை பாதகங்கள் பீஹாரில் சாதாரண விஷயங்களாகி விட்டன. ஜாதி ரீதியான மோதல்களிலிருந்து,நில உரிமை சம்பந்தப்பட்ட சண்டைகள் உட்பட, அரசியல் விரோதங்களினால் ஏற்படும் சச்சரவு வரை - எல்லாவிவாகரங்களிலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதும், கொலைகள் நிகழ்வதும் - பீஹாரைப் பொறுத்தவரையில்அதிர்ச்சி தரும் செய்திகள் அல்ல - அன்றாட நிகழ்ச்சிகள்.
இவ்வளவு நடந்தும் கூட, பீஹாரில் ஜனாதிபதி ஆட்சி என்ற பேச்சு எழுந்தாலே பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது.ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்த, மத்திய அரசு திட்டமிடுகிறது என்று கூக்குரல் எழுப்புகிறது. அராஜகம்நடப்பது, ஜனநாயகத்தின் இன்றியமையாத அம்சம் - என்பது பீஹார் கற்றுத் தருகிற பாடம்.
மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியை ஒடுக்க மார்க்சிஸ்ட்டுகள் வன்முறையை அவிழத்து விட்டிருக்கிறார்கள். 17பேர் ஒட்டு மொத்தமாக எரித்துக் கொல்லப்பட்டனர் - என்ற மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு இதுவரைஆதராமில்லை.
ஆனால் 17 பேரைக் காணோம் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி உண்மை தெரியாவிட்டாலும், இதைத் தவிர்த்துப்பார்த்தால் கூட, மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், வாக்காளர்களும் கூட, மார்க்சிஸ்ட்டுகளின்அராஜகத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பது பல பத்திரிக்கைகளின் செய்திகள் மூலமாகத் தொடர்ந்து உறுதிசெய்யப்பட்டு வருகிறது.
பதிலடிக்கு மம்தா கட்சியினரும் தயாராக இருப்பதால், மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை பெரும் அளவில்அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், என்ன நடக்கிறது? எது உண்மை? மாநில அரசுஎடுக்கும் நடவடிக்கை என்ன? என்று மத்திய அரசு கேள்வி எழுப்புவதற்கே ஆஹா, மாநில உரிமையில்தலையிடுகிறாயா? என்று எதேச்சாதிகார எதிர்ப்பாளர்கள் கொசித்தெழுகிறார்கள், மக்கள் கொலை - இங்கே மாநிலஉரிமையாகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications