பஞ்சலோக சிலைகள் கடத்திய 6 பேர் கைது
சென்னை:
சென்னையில், பஞ்சலோக சிலைகளை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரபாகரன் கூறுகையில்,எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலைகளை மீட்க அமைக்கப்பட்டசிறப்புப்படை போலீஸார், தமிழகத்தின் பல கோயில்களிலும் பஞ்ச லோகங்களைகடத்திய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து பல கோயில்களிலிருந்தும் கடத்தப்பட்ட பழமையான பஞ்சலோகசிலைகள் கைப்பற்றப்பட்டன.
கடத்தல்காரர்களிடமிருந்து ஒன்றரை அடி உயரமுள்ள அர்த்தநாரீஸ்வரர், அய்யனார்மற்றும் பார்வதி தேவியின் சிலைகளை கைப்பற்றப்பட்டன. இவற்றின் விலை பல லட்சரூபாயாகும்.
கணேசமூர்த்தி (21) என்பவர் ஜனவரி 24-ம் திே கைது செய்யப்பட்டார். அவர்கொடுத்த தகவலின்படி சிறப்பு படை தஞ்சாவூரிலும், வேதாரண்யத்திலும் புலன்விசாரணை செய்து தஞ்சாவூரில் முருகானந்தம் (27) என்பவரைக் கைது செய்தனர்.
அதன் பின் தஞ்சாவூரிலேயே ரமேஷ் (27), ஆனந்தன் (36), துரை சிங்கம் (26) மற்றும்முரளி (31) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்கள் 6 பேரும் நீதிமன்ற காவலில்வைக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications