பதவி விலக மாட்டேன் .. வாஹித் பிடிவாதம்
ஜகார்தா:
பல்வேறு பிரச்சனைகளால் சூழப்பட்டிருக்கும் இந்தோனேஷிய அதிபர் அப்துல்ரஹ்மான் வாஹித், தன் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம்நிறைவேற்றப்பட்டும் கூட பதவியிலிருந்து விலக மாட்டேன் என கூறியுள்ளார்.
வாஹித் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறி அவர் மீது கண்டனம் தெரிவித்துநாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அவர் திறமையில்லாத ஆட்சிநடத்தி வருவதாகவும் அவர் மீது குற்றச்சுாட்டு உள்ளது.
வாஹித் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்தில்வெள்ளிக்கிழமை எழுந்தது. நாடாளுமன்றம் மட்டுமல்லாது, இந்தோனேசியாமுழுவதிலும் வாஹித்திற்கு எதிர்ப்பு அலை அதிகரித்து வருகிறது.
வாஹித்துக்கு முன் அதிபர் சுகார்தோ மீதிருந்தது போலவே இவர் மீதும்குற்றச்சாட்டுகள் இருப்பது மக்களிடையேயும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அதிபர் பதவியிலிருந்து வாஹித் விலக மாட்டார் என அதிபரின்செய்தித் தொடர்பாளர் விமர் விடோலியர் கூறியுள்ளார். இது குறித்து அவர்கூறுகையில், அதிபர் 2004-ம் ஆண்டு வரையில் பதவியில் நீடிப்பார் என கூறினார்.
வாஹித் கூறுகையில், கண்டன தீர்மானம் ஜனநாயகத்திற்கு ஒரு பாடம். ஆனால்விசாரணைக் கமிஷன் கொடுத்த அறிக்கை தவறானது. கமிஷன் கொடுத்துள்ளவிவரங்கள் உண்மைக்கு புறம்பானவை என கூறினார். இந்த விஷயம் குறித்து மேலும்கருத்து கூற மறுத்து விட்டார்.
வாஹித் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து நிரூபிக்க நான்கு மாதங்கள் ஆகலாம்.அதற்கு முன் அவர் மீது நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்து தீர்மானம்நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications