ஓய்வு பெறும் நாளன்று நீதிபதி சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

கோவை:

நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நீதிபதிஓய்வு பெறும் நாளன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கோத்தகிரி பகுதி மாஜிஸ்திரேட்டாக இருந்த மாரியப்பன் ஒரு வார கால விடுமுறையில்சென்றிருந்தார். அப்போது தேங்கிக் கிடந்த வழக்குகளை விரைவாக முடிக்க குன்னூர்மாஜிஸ்திரேட்டாக உள்ள டேவிட்டை பொறுப்பு மாஜிஸ்திரேட்டாக நீதிபதி அருமைநாயகம் நியமித்தார்.

பொறுப்பு நீதிபதி சுமார் 150 வழக்குகளை உடனடியாக முடித்து தீர்ப்பு வழங்கினார்.அதில் கோத்தகிரியைச் சேர்ந்த கொள்ளை வழக்கும் ஒன்றாகும். இந்த வழக்கில் பலலட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிக்குகுறைந்த பட்ச தண்டனை அளித்ததோடு பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களும்மீட்க உத்தரவிடப்படவில்லை.

இதையடுத்து அதிருப்தியடைந்த வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிபதி மீது புகார்தெரிவித்திருந்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் புகார் ஒன்றையும்அளித்திருந்தனர். இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் ரிட் மனுஒன்றை வக்கீல்கள் சங்கம் தாக்கல் செய்ததது.

இந்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி ஜெயின், சம்பத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,மாவட்ட நீதிபதி அருமை நாயகத்தை ஜனவரி 31ம் தேதி இடை நீக்கம் செய்துஉத்தரவிட்டார். அருமை நாயகம் 31ம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அதே போல குன்னூர் மாஜிஸ்திரேட் ஜோசப் டேவிட், கோத்தகிரி நீதிமன்ற எழுத்தர்அசோக் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+