கொள்ளையர்கள் சுட்டுக்கொலை
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பூகம்பம் ஏற்பட்ட இடத்தில் கொள்ளையடித்தது தொடர்பாக 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பூகம்பம் ஏற்பட்ட இடத்தில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளையர்கள் புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டி வருகிறார்கள் என்றுபோலீஸாருக்குக் கிடைத்த புகாரையடுத்து அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களும், போலீஸாரும் 24மணிநேரமும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
பூகம்பத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பூஜ், அஞ்சார், பச்சாவ் பகுதிகளில் கொள்ளை நடந்து வருவதாகப் போலீஸாருக்குப் புகார்கொடுக்கப்பட்டது. இங்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், புறக்காவல் படை வீரர்கள் ஆகியோர் காவல் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கட்ச் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர், ஏ.கே.சிங் கூறுகையில், பூஜ் நகரில் பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்திலிருந்து பணம்மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்லும்போது 3 கொள்ளையர்களைப் போலீஸார் சுட்டுக் கொன்றனர். மேலும் அவர்கள்கொள்ளையடித்துச் சென்ற நகை, பணம் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர் என்றார்.
இதுதவிர ராஜ்கோட்டில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கொள்ளையடித்த 9 பெண்களைப் போலீஸார்கைது செய்தனர். இதையடுத்து மருத்துவமனை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநில காவல்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கூறுகையில், கொள்ளையடித்துக் கொண்டு பஸ்சில் தப்பித்துச் செல்ல முயன்ற 10 பேரை பஸ்சை நிறுத்திபோலீஸார் கைது செய்தார்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications