கிளின்டன் வருத்தம்
டெல்லி:
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன், பிரதமர் வாஜ்பாயைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் குறித்தும், அங்குதற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் விசாரித்தார்.
கிளின்டன் வாஜ்பாயைத் தொடர்பு கொண்டு பேசிய விவரம் குறித்து கிளிண்டனின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் குறித்துஅமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தவிர அமெரிக்கர்களும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், முடிந்த அளவு குஜராத் பூகம்பத்திற்கு நிவாரண உதவி செய்யக் காத்திருக்கிறார்கள். குஜராத் பூகம்பநிவாரணத்திற்கு அமெரிக்கா எந்த அளவில் உதவி செய்யலாம் என்று வாஜ்பாயின் ஆலோசனைகளை கிளின்டன் கேட்டுக் கொண்டார். இதுதவிரகுஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சில கிராமங்களை அமெரிக்கா தத்தெடுத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறது என்று கிளின்டன்பேசியதாகக் கூறினார்.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஜனவரி 30 ம் தேதி தொலைபேசி மூலம் பிரதமர் வாஜ்பாயைத் தொடர்பு கொண்டு பேசி,குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
அமெரிக்கா ஏற்கனவே 6 ராணுவ வீரர்கள் கொண்ட குழுவை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டபகுதிக்கு இன்னும் அதிகமான உதவி தேவைப்படுமா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications