நிதி வசூலிக்க கூடுதல் வரி
டெல்லி:
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக வருமானவரி செலுத்துவோரிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் கூடுதலாக 2 சதவீதம் வரி வசூலிப்பது என்றுவியாழக்கிழமை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வருமான வரி செலுத்தும் தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 சதவீதம் வரி விதிப்பதால் ரூ 1300 கோடி அதிகமாகக் கிடைக்கும். இந்தநிதி குஜராத் பூகம்ப நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படும்.
ஆண்டு வருமானம் ரூ 60, 000 மற்றும் அதற்கு மேல் உள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இந்த வரி வசூலிக்கப்படும். இந்த ஆண்டு, ஏப்ரல்மாதம் 1 ம் தேதி முதல் 2002 மார்ச் 31 ம் தேதி வரை இது அமலில் இருக்கும்.
குஜராத் நிவாரண நிதிக்காக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி செய்தால் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும்என்று முடிவெடுக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications