காட்டில் கடும் மோதல்.. வீரப்பன் கூட்டாளி பிடிபட்டான்
சென்னை/பெங்களூர்:
தமிழ்நாடு, கேரள காட்டு எல்லைப் பகுதியில், சாமந்திக்காடு என்ற இடத்தில் வீரப்பன் கும்பலுக்கும், தமிழ்நாடுசிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை கடும்மோதல் நடந்தது. இதில் வீரப்பனின் ஒருகூட்டாளி பிடிபட்டான். ஒருவன் காயமடைந்தான். ஒருவன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வீரப்பன் கும்பலைச் சேர்நத் 15 பேர் கோயம்புத்தூர் பாலக்காடுக்கு இடையே இருக்கும் சம்பந்திக்காடு பகுதியில்இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் கிடைத்ததும் அதிரடிபடை வீரர்கள் அந்த பகுதியை முற்றுகையிட்டனர்.
அதிரடிப்படை வீரர்களைப் பார்த்ததும், வீரப்பன் கும்பல் அவர்களை நோக்கி குண்டுகளை வீசினர். அதிரடிபடைவீரர்களும் திருப்பி தாக்கினர். இந்த தாக்குதலில் ஒருவன் கொல்லப்பட்டான். ஒருவன் பிடிபட்டான். மற்றவர்கள்காட்டுக்குள் புகுந்து தப்பி விட்டனர். அதிரடிபடை வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையினரும் உதவினர்.
கேரள காட்டில் வீரப்பன் .. கர்நாடக டி.ஜி.பி:
இந்த மோதல் சம்பவம் குறித்து கர்நாடக போலீல் டிஜிபி தினகர் கூறுகையில் , தமிழகஅதிரடிபடையின் ஒரு இன்ஸ்பெக்டரும், 11 கான்ஸ்டபிள்களும் தேடுதல்வேட்டையில் காலையில் ஈடுபட்டிருந்த போது வீரப்பனின் கும்பலைச் சேர்ந்த 10பேரை பார்த்தனர். உடனே அவர்கள் அந்த கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அந்த கும்பலும் திருப்பி சுட்டது. பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்தபொருட்களையெல்லாம் போட்டு விட்டு ஓடிவிட்டனர். அவர்கள் வேறு வேறுதிசைகளில் தப்பி ஓடி விட்டனர்.
அவர்கள் சார்ஜ் செய்யப்பட்ட ஒரு மொபைல் போன், நிறைய துணிகள், ரூ 3 லட்சம்ஆகியவற்றை போட்டுவிட்டு போய்விட்டனர். ரூ 3 லட்சமும் 500 ரூபாய்நோட்டுக்களாகும்.
பல வருடங்களாக வீரப்பனை தேடும் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுவருகின்றனர். ராஜ்குமார் கடத்தலுக்குப் பிறகு இதுவே வீரப்பன் கும்பலுக்கும்அதிரடிப்படையினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதலாகும்.
கர்நாடக அதிரடிப்படை அதிகாரிஹர்ஷவர்த்தன ராஜு கேரள- தமிழக எல்லைக்குகூடுதல் அதிரடி படையினர் வீரர்களுடன் விரைந்திருக்கிறார்.
கேரள காட்டுப் பகுதி வீரப்பனுக்குப் புதிது. எனவே அவனால் ரொம்ப தூரம் போகமுடியாது. இந்த முறை வீரப்பனை பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதுஎன்றார் தினகர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications