மதம் மாறியவர்கள் மீண்டும் மாறத் தேவையில்லை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

பிற மதங்களுக்கு மாறியவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாறி வரத் தேவையில்லை என்று கருத்துத்தெரிவித்துள்ளார் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறிச்சென்றவர்களை, மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றுவது தேவையில்லாதது.

ஏழை, எளிய மக்கள் மீது இந்துமத சாமியார்களும், ஞானிகளும் அன்பு செலுத்தி, பரிவு காட்டினாலே, மதமாற்றத்தைத் தடுக்க முடியும்.

தமிழகம் முழுவதிலும் உள்ள ஏழைக் கோவில்களில் தினசரி பூஜைகள் நடப்பதற்கு தேவையான நடவடிக்கைகளைஎடுத்து வருகிறேன். தினசரி பூஜைகளுக்காக வசதியில்லா கோவில்களை அடையாளம் கண்டு அவற்றிற்கு ரூ. 500முதல் ரூ. 1000 வரை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன்.

இந்து அறநிலைய அறக்கட்டளைத் துறையின் கீழ் வரும் கோவில்களில் 270 கோவில்கள் நிதிப் பற்றாக்குறையால்திண்டாடி வருகின்றன. இந்தக் கோவில்களில் தினசரி பூஜைகள் நடத்த வழி பிறந்தால் நல்லது.

கிராமங்களில் உள்ள கோவில்களில் பிரதோஷ பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளேன். காஞ்சீபுரம்,திருவண்ணாமலை பகுதிகளில் மொத்தம் 25 கோவில்களில் இந்த பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+