நாளை அஞ்சலி தினம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
குஜராத் பூகம்பத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக, இநதியா முழுவதிலும், பிப்ரவரி 4-ம் தேதிஅஞ்சலி தினமாக அனுசரிக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
ஜனவரி 26-ம் தேதி குஜராத்தின் சில மாவட்டங்களை உலுக்கிய பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கானோர்உயிரிழந்தனர். பிப்ரவரி 4-ம் தேதியுடன் பூகம்பம் ஏற்பட்டு 10 நாட்களாகிறது.
இந்த நிலையில், குஜராத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக நாடு முழுவதிலும்,ஞாயிற்றுக்கிழமையை அஞ்சலி தினமாக அனுசரிக்க வி.எச்.பி. கோரிக்கை விடுத்துள்ளது.
வி.எச்.பி. அமைப்பின் சர்வதேச தலைவர் டாக்டர் பிரவீன் பாய் தொகாடியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,இந்தியக் குடிமக்கள் தங்களது வருவாயில் ஒரு பகுதியை, குஜராத் நிவாரண நிதிக்கு அன்பளிப்பாக கொடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications