11-வது சட்டசபை .. ஒரு "பிளாஷ்பேக்
சென்னை:
வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த 11-வது சட்டசபையில் மொத்தம் 273 சட்ட மசோதாக்கள்நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தின் 11-வது சட்டசபை வெள்ளிக்கிழமையுடன் தனது சபைக் கூட்டத்தை முடித்துக் கொண்டது. இறுதிநாளின்போது பல உருக்கமான காட்சிகளை சபை கண்டது. முதல்வரின் பரிவான பேச்சு, பா.ம.க. உறுப்பினர்கணேசனின் உருக்கம், சபாநாயகரின் வாழ்த்து என சபையே பள்ளி, கல்லூரி மாணவர்களின் பிரிவுபசார விழாநிகழ்ச்சி போல காணப்பட்டது.
இந்த சட்டசபையில் இதுவரை நடந்த நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் கூறியதாவது:
மொத்தம் 273 சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் முக்கியமானவை டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அமைப்பது மற்றும் மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றியது, (ஜெயலலிதா) ஊழல்வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட்டுகள் நியமிப்பதற்கான சட்டமசோதா, தகவல் அறியும் சட்டமசோதா, ஈவ் டீசிங்கிற்குத் தடை ஆகியவை.
மொத்தம் 266 சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு விவாதிக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதிஇவற்றில்140 தீர்மானங்கள் வரை பதில் சொல்லியிருக்கிறார்.
கேள்வி நேரத்தின்போது32,687 கேள்விகள் அனுமதிக்கப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் எடப்பாடி கணேசன், அதிகபட்சமாக 10,222 கேள்விகள் கேட்டுள்ளார்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அதிகபட்சமாக பதில் அளித்த அமைச்சர்கள் சுகாதாரத் துறை அமைச்சர்ஆர்க்காடு வீராசாமி, போக்குவரத்து அமைச்சர் பொன்முடி, கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோர் மட்டுமே.
திமுக உறுப்பினர்கள் கே.சுந்தர், வி.தமிழ்மணி, கே.வி.நன்னன் ஆகியோர் சட்டசபைக் கூட்டம் நடந்த அனைத்துநாட்களிலும் (264 நாட்கள்) அவைக்கு வந்திருந்தனர்.
ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தம் 30 சதவீத நேரம் மட்டுமே பேசுவதற்கு ஒதுக்கப்பட்டது. மீத நேரம்எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது என்றார் சபாநாயகர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications