வீரப்பனைப் பிடிக்க வாளையாரில் அதிரடிப்படை குவிப்பு
கோவை:
வீரப்பன் கும்பலுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையையடுத்து தமிழக கேரள எல்லைப் பகுதியான வாளையாரில்அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை வீரப்பன் தலைமையிலான கும்பலுக்கும், தமிழக அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே,தமிழக, கேரள எல்லைப் பகுதியில் செம்மந்திக் காடு என்ற காட்டில் நேரடிச் சண்டை நடந்தது.
இந்த சம்பவத்தையடுத்து சத்தி, பண்ணாரி முகாம்களில் இருந்த அதிரடிப்படையினர் கோவைக்கு வந்துசேர்ந்துள்ளனர். இது தவிர, சேலம், மதுரை, கோவை மாவட்டங்களில் உள்ள போலீசார் வாளையார் செக்போஸ்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆலந்துறை, சின்னான்பதி ஆகிய கிராமங்களில் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில்ஈடுபட்டுள்ளனர். இப்போது வீரப்பன் இப்பகுதிகளில் பதுங்கி இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதால் இந்தநடவடிக்கையைப் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications