6 சீக்கியர்கள் படுகொலை .. ஸ்ரீநகரில் ஊரடங்கு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சனிக்கிழமை மாலை தீவிரவாதிகள் நடத்தி வெறித் தாக்குதலில் 6 சீக்கியர்கள்உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்ரீநகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரிலுள்ள மெஜூர் நகர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இதுகுறித்து ஐ.ஜி. அசோக் பான் கூறுகையில்,மாலை 6.45 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்க், மெஜூர் நகரில் புகுந்து அங்கு சரமாரியாக துப்பாகிகச் சூடுநடத்தினர். இதில் 6 சீக்கியர்கள் இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்திலேயே 2 சீக்கியர்கள் இறந்தனர். நான்கு பேர் மருத்துவமனையில் இறந்தனர். இந்தசம்பவத்தையடுத்து பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாரம்புரா, ரைனாவாரி, சத்தர், கோத்திபாக், ராம்முனுஷிபாக்,மாசியுமா, ஷீத்ஜங், பட்டமல்லோ, ஷெர்கா ஆகிய பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதுஎன்றார்.

இதற்கு முன்பு கடந்தஆண்டு மார்ச் மாதம் 35 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். சமீபகாலமாக முஸ்லீம்கள் அல்லாத பிற இனத்தவர்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவதுகுறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, காஷ்மீர் பகுதி முழுவதிலும் நடந்த பல்வேறு சம்பவங்களில் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பைச்சேர்ந்த 2 தீவிரவாதிகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+