இலங்கை கரன்ஸி வீழ்ச்சி .. எதிர்க்கட்சிகள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அரசு கடந்த மாதம் அறிமுகப்படுத்திய கரன்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியிலிருந்து கொழும்பிற்கு எதிர்ப்பு பயணம் ஒன்றை இலங்கைஎதிர்க்கட்சியினர் தொடங்கியுள்ளனர்.

கண்டியில் திரண்டிருந்த சுமார் 25000 தொண்டர்களிடம் பேசிய இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே 5நாட்கள் நடைபெறும் இப்பயணம்இலங்கை அரசை நீக்குவதற்கான முதல் பயணம் என்றார்.

53வது ஆண்டு சுதந்திர தினத்தை கொழும்பில் அதிபர் கொண்டாடும் அதே நேரத்தில் கண்டியில் சந்திரிகா அரசை எதிர்த்து போராட்ட பயணம்தொடங்கியுள்ளது.

கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கரன்சியானது கிட்டத்தட்ட 12 சதவீத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. பின்னர் இந்த வீழ்ச்சி 5 சதவீதமாகக்குறைந்தாலும் விலைவாசி உயர்வு குறையவில்லை.

ஆளுங்கட்சியினர் தாக்கக்கூடும் என்று ஐக்கிய தேசீயக்கட்சியினர் கருதிய நிலையில் அதிபர் சந்திரிகா போராட்டத்தை தடுக்க வேண்டாம் என்று தனதுஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+