வயர்லெஸ் மூலம் தகவல்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் தகவல் தொடர்பு முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு விட்டதால் அப்பகுதியில்ரோந்துப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள், வயர்லெஸ் மூலம் நிவாரணப்பணிகள், பூகம்பத்தின் தீவிரம் குறித்து மத்திய அரசுக்கும்,வெளிநாட்டுக்கும் தகவல்கள் கொடுத்து வருகின்றனர்.
அகமதாபாத்தில் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வரும் பிரிகேடியர் பெனிவால் கூறுகையில், அகமதாபாத் நகரில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள ஏற்பாடுகள்செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே இரண்டு கமாண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், பொதுமக்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்து வருகிறார்கள். தகவல் தொடர்பை சீர்படுத்தும் பணியும் மிக வேகமாக நடந்துவருகிறது. பொதுமக்களுக்கு உடனடியாக தொலைபேசி, மின்சாரம் ஆகியவற்றைச் செய்து கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முதலில் பூஜ் பகுதியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிமாநிலங்களுடன் தொடர்பு கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டது. இந்தியாவில்பூகம்பத்தால் தகவல்தொடர்பு முற்றிலுமாகப் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரும் குஜராத்மாநிலத்தில் பூகம்பம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.
பூஜ், அகமதாபாத், மோர்பி, ராஜ்கோட், சுரேந்திரநகர் நகர்களிலிருந்து மொபைல் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications