கருணாநிதிக்கு கருப்புக்கொடி காட்ட அ.தி.மு.க. முடிவு
பாண்டிச்சேரி:
தமிழக முதல்வர் கருணாநிதி பாண்டிச்சேரிக்கு வரும் போது அவருக்கு கறுப்பு கொடி காட்ட இருப்தாக பாண்டிச்சேரி அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அக் கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
திங்கள் கிழமை நடந்த அ.தி.மு.க.வின் உயர் மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் படி, இந்த மாதம் 7-ம் தேதி தமிழக முதல்வர்கருணாநிதி பாண்டிச்சேரிக்கு வரும் போது, அவர் ஜாதி அரசியலை ஆதிரிப்பதற்காகவும், ஜெயலலிதா மீது வீண் பழி சுமத்தி வழக்குகள் போடப்படுத்துவதைகண்டித்தும், தமிழகத்தில் இருக்கும் தலித்களுக்கு தேவையான சலுகைகளை அளிக்கவில்லை என்பதற்காகவும் அவருக்கு எதிராக கருப்புக் கொடிகாட்டப்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
முறைகேடாக இடங்களை வாங்கியது குறித்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தற்போது நடந்துவரும் புலனாய்வுதுறை விசாரணைவிரைந்து முடிக்கப்பட வேண்டும் எனவும் பாண்டிச்சேரி அரசை கேட்டு மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாண்டிச்சேரியில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி 74 மனுக்கள் தாக்கல் செய்ப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் சிமெண்ட் விலைஉயர்ந்ததற்க்கு தமிழக முதல்வரும், மத்திய வர்த்தக துறை அமைச்சர் முரசொலி மாறனுமே காரணம் என்று இந்த கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
