மீண்டும் இங்கிலாந்து உதவி
லண்டன்:
இங்கிலாந்தில் உள்ள 14 அறக் கட்டளைகள் சேர்ந்து குஜராத்துக்கு 15 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி வழங்கத் தீர்மானித்துள்ளது.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு இங்கிலாந்து, ஏற்கனவே நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் அளித்துள்ளது. இப்போது அங்குள்ள 15அறக்கட்டளைகள் சேர்ந்து மீண்டும் நிதியுதவி வழங்கத் தீர்மானித்துள்ளது.
வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கொடுக்கும் நிதியுதவியையும் சேர்த்து பிப்ரவரி மாத இறுதிக்குள் 15 மில்லியன் பவுண்டுகள்சேகரித்து குஜராத் மாநிலத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளைகள் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நாங்கள் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு நிதியுதவி செய்யுமாறு பொதுமக்களிடம்வேண்டுகோள் விடுத்து வருகிறோம். அவர்கள் கொடுக்கும் கணக்கை வைத்து குஜராத்துக்கு நிதியுதவியளிப்போம்.
அதிக அளவு பணம் வசூலானால் நாங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்குசிகிச்சை அளிக்க உதவி புரிவோம்.
5 மில்லியன் பவுண்டுகள் வசூல் செய்து கொடுக்கத் தீர்மானித்துள்ளோம். அதைவிட அதிகமாக வசூலானால் அவற்றைக் கொடுப்போம். இங்கிலாந்தில்உள்ள பிராட்போர்டு, பிரிமின்காம், ஏலிங் மற்றும் கவன்ட்ரி நகர்களிலிருந்து அதிக அளவு நிவாரண நிதியுதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றார்.
முன்னதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தில் உள்ள இந்துக் கோவில்களிலிருந்து 50 டன் பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்கள்,மீட்புப்படையினர் ஆகியோர் குஜராத்துக்குச் சென்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications