தங்கபாலு மீது நடவடிக்கை .. இளங்கோவன்
ம துரை:
சட்ட விரோத போக்கை கண்டித்து தங்கபாலு மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை மதுரைவந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதில் மத்திய அரசு அக்கறை செலுத்தாமல் அலட்சியமாக நடந்து வருகிறது.இதை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாயிகள் பேரணி மற்றும் மாநாடு நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இது இந்த மாதம் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதில் கட்சி தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்கிறார்.அப்போது குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோருக்காக திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்கள், நிதி உதவிஆகியவை சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்படும்.
அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடந்துள்ளது. தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வார்த்தைநடத்த கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி மீண்டு சென்னை வரவிருக்கிறார்.
தனித்து ஆட்சி அமைக்கவும், ஆட்சியில் பங்கு பெறவும் காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் தற்போதையநடைமுறைக்கு எது சாத்தியமோ அதனடிப்படையில் செயல்படுவோம். அதை ஏற்றுக் கொள்வோம்.
அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டு சேருமா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல இயலாது. கட்சிக்கு எதிரானகட்சி விரோத போக்குகளில் தங்கபாலு ஈடுபட்டு வருகிறார். என்னை பதவியிலிருந்து நீக்கி விடுவார்கள் எனஜோசியம் கூறி வருகிறார்.
இமாசல பிரதேசம், பிகார், ஹரியானா மாநிலங்களில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அதே போல் தங்கபாலு மீதும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
நானும் அவர்கள் செயல்கள் குறித்து சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறி வருகிறேன். தமிழகத்தில் எனக்கோ,தங்கபாலுவுக்கோ எந்த செல்வாக்கும் கிடையாது. சோனியா காந்திக்கு தான் செல்வாக்கு உள்ளது என கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications