தர்மபுரி அரசு மருத்துவமனையில் பதட்டம்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி கிளைச்சிறையில் விசாரணைக்காக அடைக்கப்பட்டிருந்த கைதி இறந்த தகவலைத் தொடர்ந்து தர்மபுரிஅரசு மருத்துவமனையில் பதட்டம் ஏற்பட்டது.

தர்மபுரி குப்பாண்டி தெருவில் வசித்து வருபவர் முனியப்பன் (40). இவர் சாராய வியாபாரி. இவர் மீது 20-க்கும்மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் பல முறை சிறைக்கும் சென்று வந்தவர். சென்ற மாதம் கள்ளச்சாராயவழக்கில் இவரை போலீசார் கைது செய்தனர்.

அதன் பின் இவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இவர் சனிக்கிழமை இரவு 9.30 இறந்து விட்டதாக முனியப்பனின் மனைவி கெளரிக்குஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவிக்கப்பட்டது.

உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாககூறப்பட்டது. ஆனால் அவர் சாவில் மர்மம் இருப்பதாக முனியப்பன் குடும்பத்தினர் கருதுகின்றனர்.

முனியப்பன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உடனேயே தகவல் தெரிவிக்காததும், இரவில் இறந்தவர்பற்றிய தகவல் நேரம் கடத்தப்பட்டு அதிகாலையில் தெரிவிக்கப்பட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனமுனியப்பனின் உறவினர்கள் கூறினர்.

இது குறித்து ஆர்.டி.ஓ.ஆறுமுகம் கூறுகையில், முதல் நிலை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முனியப்பனின்மனைவி,மற்றும் பஞ்சாயத்தார் தரப்பினர் அளித்த தகவல் மாவட்ட ஆட்சி தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.அவர் உத்தரவிட்ட பிறகே சிறைத்துறை மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் எனக்கூறினார்.

பிரேத பரிசோதனை முடிந்து முனியப்பனின் உடல் எடுத்துச் செல்லப்படும் வரை தர்மபுரி அரசு மருத்துவமனையில்பதட்டம் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+