மோப்பநாய்கள் பேருதவி
மும்பை:
மனிதனின் செல்லப்பிராணி, உற்ற நண்பன் என்றழைக்கப்படும் நாய்கள், குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பிணங்களைகண்டுபிடிப்பதில் பேருதவி செய்து வருகின்றன.
குஜராத்தில் கட்ச், பூஜ், ராஜ்கோட், அகமதாபாத் உள்பட அனைத்து பகுதிகளிலும் இடிபாடுகளுக்கிடையில் உயிருக்குப் போராடும் மனிதர்கள்,குழந்தைகளை அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது இந்த மோப்ப நாய்கள்.
மீட்புப் படையினர் மற்றும் போலீஸாருடன் மோப்ப நாய்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அவைகள் இறந்த சடலங்களையும், உயிருக்குப்போராடும் மனிதர்களையும் அடையாளம் காட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மோப்பம் பிடிக்கும் ஆற்றல் படைத்த நாய்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு பாலைவனம் போல் காட்சியளிக்கும் பகுதிகளில் சடலங்களை வெகுஎளிதாக மோப்பம் பிடித்துக் கண்டு பிடித்துவிடுகின்றன.
ஆங்காங்கே கிடக்கும் துணிமணிகள், சிதைந்து போன உடல் உறுப்புக்கள் ஆகியவைகளை வைத்து மோப்ப நாய்கள் சடலங்களையும், உயிருக்குப் போராடும்மனிதர்களையும் அடையாளம் கண்டு பிடித்துவிடுகின்றன. இறந்து கிடக்கும் மனிதர்கள் தவிர, இறந்து கிடக்கும் கால்நடைகள், குருவிகள், விலங்குகள்,பூகம்பம் நடந்த இடத்தில் நடமாடும் கொள்ளையர்களையும் கண்டு பிடித்து விடுகின்றன இந்த மோப்பநாய்கள்.
இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வரும் மீட்புப்படை மட்டுமின்றி வெளி நாடுகளிலிருந்து வரும் மீட்புப் படையினரும் மோப்ப நாய்ப்படையின்அத்தியாவசியத்தையும், அவசியத்தையும் உணர்ந்து அவைகளைத் தங்களுடன் கொண்டு வந்துள்ளனர்.
நன்கு பயிற்சி கொடுக்கப்பட்ட நாய்கள் பிணங்களை அடையாளம் காண்பதில் பேருதவி புரிகின்றன. இதுவரை கட்ச், பூஜ், ராஜ்கோட், சுரேந்திரநகர், சூரத்ஆகிய நகர்களில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருக்கும் நகை, பணம் ஆகியவற்றையும் நாய்கள் மோப்பம் பிடித்துக் கொடுத்துள்ளன.
ரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்களும், மகாராஷ்டிராவிலிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டமோப்ப நாய்களும் குஜராத் மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications