ஹூரியத்திற்கு விசா கோருகிறது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
காஷ்மீரில் அமைதி திரும்ப ஹூரியத் அமைப்பு செய்யும் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர்கள் பாகிஸ்தான் வர இந்தியா விரைவில் அனுமதிதரவேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா அறிவித்த போர் நிறுத்தத்தினால் நிலவும் சுமுகமான சூழ்நிலையில், காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க மூன்று கட்ட திட்டம் ஒன்றினை காஷ்மீர்குறித்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய சத்தார் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த இரண்டு மாதமாக அமலில் இருந்த சண்டைநிறுத்தம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. திட்டத்தின்முதல்கட்டப்படி இந்தியா அறிவித்த சண்டை நிறுத்தத்தை ஏற்று பாகிஸ்தானும் சண்டைநிறுத்தம் செய்துள்ளது.
அடுத்த கட்டமாக, இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாதிகளிடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்காக ஹூரியத் அமைப்பினர்கள் விரைவில் பாகிஸ்தான்வரவேண்டும். அதற்காகவே விரைவில் அவர்களுக்கு விசா வழங்கக் கோருகிறோம்.
அவர்களுடன் விவாதித்த பிறகு காஷ்மீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இருவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய திட்டத்தை இந்தியாவும் பாகிஸ்தானும்பேசி முடிவு செய்யவதே திட்டத்தின் மூன்றாவது கட்டமாகும். இருமாதங்களுக்கு முன்பே இத்திட்டம் குறித்து இந்திய அரசிற்கு தெரிவித்தும் ஹூரியத்அமைப்பிற்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது என்றார்.
ஜனவரி 15ம் தேதி புறப்படுவதாக இருந்த 5 நபர் ஹூரியத் குழுவிற்கு விசா வழங்கப்படாததால் பயணத்தை ஒத்திவைத்துள்ளது ஹூரியத் அமைப்பு என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications