2 பா.ம.க. அமைச்சர்கள் ராஜினாமா
டெல்லி:
பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த எரிசக்தி துறை அமைச்சர் சண்முகமும், பெட்ரோலியத்துறை இணை அமைச்சர்பொன்னுசாமியும் தங்கள் அமைச்சர் பதவியை திங்கள்கிழமை ராஜினாமா செய்துள்ளனர்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியும்ஒன்று. அக் கட்சியின் சார்பில் எரிசக்திதுறை அமைச்சராக சண்முகமும், பெட்ரோலிய துறை இணை அமைச்சராகபொன்னுசாமியும் இருந்து வந்தனர்.
இதே கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மற்றொரு கட்சி தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சி. பா.ம.க. நிறுவனதலைவர் ராமதாசுக்கும், த.ரா.கா தலைவர் வாழப்பாடி ராமமூரத்திக்கும் இடையே பல மாதங்களாக கருத்துவேறுபாடு நிலவி வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து தாக்குதல் அறிக்கை வெளியிட்டு வந்தனர்.
வரவிருக்கும் தமிழக சட்டசபைதேர்தலுக்கு முன் த.ரா.கா.வை தே.ஜ. கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் எனராமதாஸ் கோரி வந்தார். அதற்கு தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதல்வருமான கருணாநிதிமறுத்து விட்டார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்த எரிசக்தி துறை அமைச்சர் சண்முகமும், மத்தியபெட்ரோலியதுறை இணை அமைச்சர் பொன்னுசாமியும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள்இருவரும், பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாசுடன் திங்கள்கிழமை பிரதமர் வாஜ்பாயை சந்தித்து தங்கள்ராஜினாமாவை சமர்பித்தனர். இவர்கள் ராஜினாமாவின் மூலம் பா.ம.க., த.ரா.கா.வின் மோதல் உச்சகட்டத்தைஅடைந்துள்ளதாக கருதப்படுகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications