தீவிரமாகிறது வீரப்பன் வேட்டை
கோவை:
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து அதிரடிப்படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர்குவிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் வீரப்பனைத் தேடும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தேடுதல் வேட்டையில் வாளையார் சிறுவாணி, ஆலாந்துறை ஆனைகட்டி, போளுவாம்பட்டி, பூண்டி, ஆகிய வனப்பகுதிகளையொட்டி தமிழக கேரள எல்லைப் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மலைவாசிக் கிராம மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். சின்னாம்பதி போன்ற கிராமங்களுக்குச்சென்று வர போலீசார் கடும் கெடுபிடி செய்து வருகின்றனர். குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் யாரையும் அவர்கள்அனுமதிக்கவில்லை.
இப்பகுதியில் உள்ள மக்கள் ரேஷன் கார்டுகளை வைத்துக் கொண்டு தான் காட்டிற்குள் சென்று வர வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மலம்புழா, வாளையார் போன்ற பகுதிகளில் 2 ஆயிரம் போலீசாரும்குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது வீரப்பனைத் தேடும் பணியில் 7 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த வாளையார் வனப்பகுதியில் கதிரப்பா, சாமன்னா என்றஇரு படை வீரர்கள் மயக்கமடைந்தனர் என்று தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications
