கட்ச்சில் பாதுகாப்பு தீவிரம்
அகமதாபாத்:
பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் உள்ள குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
குஜராத் மாநில அரசு, கட்ச் மாவட்டத்திலுள்ள 40 கிராமங்களை மிகவும் பதட்டமான பகுதிகள் என அடையாளம் கண்டுபிடித்துள்ளது. மிகவும்பதட்டமான பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ள கிராமங்களில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இருப்பினும்கொள்ளைக்காரர்களாலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளாலும் பிரச்சனைகள் எதுவும் வராமல் இருப்பதற்காக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநில காவல்துறை அமைச்சர் ஹரேன் பான்டியா நிருபர்களிடம் கூறுகையில், மிகவும் பதட்டமான பகுதிகள் என்று கண்டறியப்பட்டுள்ளபகுதிகளில் கூடுதல் புறக்காவல் போலீஸ் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்தெந்த கிராமங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது பாதுகாப்புக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டத்தில் உள்ள நிலத்தடியில் உள்ள நீர் ஊற்றிலிருந்து நீர் சுரக்க ஆரம்பித்துள்ளது. இங்கிருந்துகிடைக்கும் நீரை சேமித்து வைத்து கட்ச் மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுக்குப் பயன்படுத்தலாம்.
கட்ச் மாவட்டத்தில் பூகம்பம் ஏற்பட்டும் உயிர்பிழைத்த மக்கள் இந்த நீரைப் பயன்படுத்தலாம். இந்த ஊற்றில் சுரக்கப்பட்ட நீர்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடிப்பதற்கு மட்டுமின்றி பயிர்களைப் பாதுகாக்கவும் இந்த நீரை அதிக அளவில் பயன்படுத்தலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications