உதவிக்கு ஏங்கும் காந்திதாம்
காந்திதாம் (குஜராத்):
குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டு 11 நாட்கள் ஆகி விட்ட நிலையிலும் கான்ட்லா துறைமுகத்தின் நுழைவாயிலாக இருக்கும் காந்திதாம்மக்களுக்கு இன்னும் நிவாரணப் பொருட்கள் முறையாகக் கிடைக்கவில்லை.
அகமதாபாத்திலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காந்திதாமில் பல ஆண்டுகளாக வசித்து வரும் கானஷியாம்பாய் ஓசா என்பவர் கூறுகையில்,பூகம்பத்தில் பூஜ் அதிகமாகப் பாதிக்கப்பட்டது என்பது உண்மைதான். அதற்காகப் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்களுக்கு உதவாவிட்டால்எப்படி?
பூகம்பம் ஏற்பட்டு 11 நாட்கள் முடிவடைந்து விட்ட நிலையில், இன்னமும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிவாரணப் பொருட்கள் எதுவும்கிடைக்கவில்லை. எல்லோரும் ஒட்டு மொத்தமாக அதிகமாகப் பாதிக்கப்பட்ட பூஜ்ஜூக்குத்தான் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியுதவிகள் மற்றும் நிவாரண உதவிகள் பூஜ்ஜூக்கே வந்து கொண்டிருக்கின்றன. எங்களை யாருமேகண்டு கொள்வதில்லை என்று குறைபட்டுக் கொண்டார்.
இங்கு வாழும் மக்கள் பலர் இன்னமும் பூகம்பம் ஏற்பட்டு விடுமோ என்ற பீதியிலேயே உள்ளனர். பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபகுதிகளில் பல மாடிக்கட்டிடங்கள், 30 ஹோட்டல்கள் ஆகியவை இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
காந்திதாமில் அண்மையில் திறக்கப்பட்ட 5 நட்சத்திர ஹோட்டல் ஹாலிடே இன் கான்ட்லா, ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த ஹோட்டலை மீண்டும்முழுவதுமாகக் கட்டினால்தான் உண்டு. மேலும் எங்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஏன் கிடைக்கவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.
அரசு அதிகாரிகளை அடித்தால் தான் எங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்று கோபத்துடன் கூறினர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications