பதிவு செய்யப்படாத அரசு பஸ் பறிமுதல்
சென்னை:
ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யப்படாமல் இயக்கப்பட்டு வந்த அரசுசொகுசு பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் ஓடும் தனியார் வாகனங்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு,இன்சூரன்ஸ் தொகை கட்டப்பட்டபின், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பதிவு எண்கொடுக்கப்பட்டு பிறகே சாலையில் செல்ல அனுமதிக்கப்படும்.
இம்மாதிரி செல்லும் வாகனங்களின் லைசென்ஸ் காலம் முடிந்துவிட்டதா அல்லது இன்னும்நிலுவையில் இருக்கிறதா என்பத குறித்து விசாரிக்கப்படும். அதில் குறைபாடுகள்காணப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய பேருந்து, அரசு தேவைக்காகவோ, பொதுமக்கள் சேவைக்காகவோஇயக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்கள் தாங்களாகவே பேருந்துக்குஎண் கொடுத்து, இந்த தகவலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் இந்த வாகனத்திற்கு, இந்த நம்பர்கொடுத்திருக்கிறோம் பதிவு செய்து கொள்ளுங்கள் என கூறப்படுவது வழக்கம். அதன்பின்தான் ஆர்.டி.ஓ. அலுவலகம் அந்த வாகனங்களை முறைப்படி பதிவு செய்து சாலையில்செல்ல அனுமதிக்கும்.
சென்ற மாதம் சென்னை மாநகர போக்குவரத்துத் துறை சார்பில் குளிர்சாதன வசதிகொண்ட இரண்டு நவீன சொகுசு பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்பொன்முடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேருந்துகளில் மக்களும் சொகுசாக பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் 10நாட்களுக்கு முன் இந்த பேருந்து பிராட்வே பகுதியில் வந்து கொண்டிருந்தபோதுஆர்.டி.ஓ. பறக்கும் படையினரால் மறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அப்போது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பதிவு செய்யப்படாமல் இந்த பேருந்து இயங்கிவருவது தெரியவந்தது. உடனே இந்த பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த செய்தி உடனடியாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்முடிக்குதெரிவிக்கப்பட்டது. அவர் இந்த பிரச்சனையில் தலையிட்டு பறிமுதல் செய்யப்பட்டபேருந்தை விடுவித்தார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications