மம்தா ரூ. 1 கோடி உதவி
மும்பை:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர்மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூஜ் மற்றும் காந்திதாம் பகுதிகளை நேரில் பார்வையிட்டார் மம்தா பானர்ஜி.பின்னர் கூறுகையில், மேற்கு ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்.
ஏற்கனவே, மம்தா பானர்ஜி, ரயில்வே ஊழியர்களுக்காக ரூ 20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் பூகம்பத்தால் உயிரிழந்த 3 ரயில்வேஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் அளித்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்த ரயில்வே ஊழியர்கள் 9 பேருக்கு தலா ஒரு லட்சம்வழங்கினார்.
பூகம்பத்தால் உயிரிழந்த 3 ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு மேற்கு ரயில்வேயில் ஒரு மாதத்திற்குள் வேலை வழங்கப்படும் என்றும்மேற்கு ரயில்வே செய்திக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications