For Daily Alerts
Just In
பா.ம.க.வால் பாதிப்பில்லை .. வாழப்பாடி
சென்னை:
பா.ம.க.வின் விலகல் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கருத்துதெரிவித்துள்ளார்.
மத்திய அரசிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி அமைச்சர்கள் அவர்களின் கட்சி முடிவுப்படி விலகியுள்ளனர். இதில் தமிழக ராஜீவ் காங்கிரஸிற்கு எந்தசம்பந்தமும் இல்லை என்று வாழப்பாடி திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கூறயுள்ளார்.
பா.ம.க. விலகியதால் மத்திய அரசுக்கு பாதிப்பு இல்லை. தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராககருணாநிதி பொறுப்பேற்பார். இதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Tuesday, February 6, 2001, 5:30 [IST]