அமைதி திரும்புகிறது
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள.
இருப்பினும் பூகம்பம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இங்கு வாழும் 40 லட்சம் மக்கள், பூகம்பத்தால் மீண்டும் பாதிப்பு ஏற்படும் என்றபயத்தில் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் வீடுகளுக்கு எதிரே வெட்டவெளியில் கூடாரங்கள் அமைத்துத் தங்குகிறார்கள்.
அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை வழக்கம் போல் உள்ளது. பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆயினும்தனியார் கல்வி நிலையங்களும், கம்ப்யூட்டர் வகுப்புகளும் வழக்கம் போல் நடைபெறுகின்றன. அங்கு மாணவர்களின் எண்ணிக்கையும் வழக்கம் போல்உள்ளது.
இருப்பினும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே உள்ள கூடாரங்களில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அகமதாபாத்மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகரப்புற வளர்ச்சிக் கழகம் ஆகிய அலுவலகங்கள் இயங்கி வந்த பல மாடிக் கட்டிடங்களுக்குப் பதில் மாற்றுக்கட்டிடங்களில் இயங்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பூகம்பம் ஏற்பட்டு அதற்குப்பின் பல தடவை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால் மக்கள் இன்னும் பீதியிலேயே உள்ளனர். அகமதாபாத் நகராட்சி துணைஆணையர் வினய் வியாசா கூறுகையில், அகமதாபாத்தில் 84 க்கும் மேற்பட்ட பல மாடிக்கட்டிங்கள் இடிந்து விழுந்து பழுது பார்க்க முடியாத வகையில்சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் எங்கள் ஊழியர்களுக்கு 43 கட்டிடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளோம். நகராட்சி தீயணைப்புப் படை வீரர்கள் மக்களுக்குத்தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப்பொருட்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அகமதாபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் எத்தனை கட்டிடங்கள், வீடுகள், கல்வி நிலையங்கள் இடிந்து விழுந்தன என்பது குறித்துகணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அது இன்னும் ஓரிரு நாளில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடிபாடுகளுக்கிடையில் இறந்து கிடக்கும் சடலங்களை நீக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி இன்னும் ஓரிரு நாட்களில்முடிவடையும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications