குவைத் விழா ரத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் பூகம்பம் காரணமாக இந்தியாவில் சோகம் நிலவுவதால், பிப்ரவரி 21 ம் தேதி முதல் இந்தியாவில் கொண்டாடவிருந்த குவைத் கலாச்சாரவிழாவை ரத்து செய்துள்ளதாக குவைத் தூதரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து குவைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால், வெகு விரைவில் கொண்டாடவிருந்த குவைத் தேசியதினத்தையும் ரத்து செய்துள்ளோம். குஜராத் கலாச்சார விழாவையும் ரத்து செய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
குவைத் ஏற்கனவே நிவாரணப் பொருட்களை, சிறப்பு விமானம் மூலம் குஜராத் மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications