பாரிஸில் இந்திய டைரக்டருக்கு கெளரவம்

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள வசுல் நகரில் நடந்து வரும் ஆசிய திரைப்படவிழாவில் வங்க மொழி திரைப்பட இயக்குனர் புத்ததேவ் தாஸ்குப்தாகெளரவிக்கப்படுகிறார்.

இந்த விழாவில் இவர் இயக்கிய உட்டாரா என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமை தாஸ் குப்தாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று அவர்பார்வையாளர்களிடையே பேசுகிறார். அவர்களது கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.திரைப்படத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக அவர் கெளரவிக்கப்படுகிறார்.

உட்டாரா திரைப்படத்தைத் தவிர மற்றொரு இந்திய டைரக்டரின் படமும் இந்தவிழாவில் இடம் பெறுகிறது. அவர் சத்யஜித்ரே. சத்யஜித் ரேயின் நாயக் என்றதிரைப்படமும், மலையாள டைரக்டர் ஷாஜி கருன் இயக்கிய வானப்பிரஸ்தம் என்றதிரைப்படமும், இலங்கை இயக்குனர் சோமரத்னே திசநாயகே இயக்கிய சரோஜா என்றதிரைப்படமும் திரையிடப்பட இருக்கின்றன.

இந்த விழா இந்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 44 படங்கள்திரையிடப்படும்.

சென்ற ஆண்டு சத்யஜித் ரே இயக்கிய தேவி, காரே பயர் என்ற படமும், சேகர் கபூர்இயக்கிய பான்டிட் குயின் படமும் திரையிடப்பட்டன.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+