ஸ்டீவுக்கு என்ன தெரியும்? .. கங்குலி எதிர்ப்பு
சென்னை:
இந்திய கிரிக்கெட் மைதான விக்கெட்டுகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பற்றிய ஸ்டீவ் வாவின் கருத்திற்குசெளரவ் கங்குலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இந்திய கேப்டன் செளரவ் கங்குலி நிருபர்களின்கேள்விகளுக்கு பதிலளித்த போது,
இந்திய மைதானங்களின் விக்கெட்டுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன்தெரிவித்திருந்த கருத்து குறித்து கேட்டதற்கு, யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை கூறுவது சரியல்ல,ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவருக்கு இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் தெரிய வந்தது எப்படி? என்று கேள்விஎழுப்பினார்.
மைதானங்கள் எந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை டெஸ்ட் போட்டி விளையாடும் போது காணலாம்.ஆஸ்திரேலியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தாலும் இங்கு வந்து அவர்கள் வெற்றி பெறுவதுகடினம்.சென்னையில் பயிற்சி முகாம் நடைபெறுவது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுவது சரியல்ல,
அணியின் பயிற்சியாளரான ஜான் ரைட்டிடம் பயிற்சி பெறும் அனுபவம் புதுமையானது. ஆஸ்திரேலியா அணிதவிர அடுத்து வரும் ஒரு ஆண்டிற்கான போட்டிக்கு தயாராவது குறித்து விவாதிக்கப்படுகிறது.
பயிற்சி முகாமில் உள்ள வீரர்களின் திறமை சோதிக்கப்படுகிறது. அணியின் பலம் எது பலவீனம் எது என்பதுகுறித்து அறிந்து அதற்கேற்ப அணி மாற்றியமைக்கப்படும்.
அனில் கும்ப்ளே போன்ற வீரர்களை ஒரு நாளில் நாம் உருவாக்கிட முடியாது. தற்போது முகாமில் திறமையானவீரர்கள் உள்ளனர். அவர்களின் திறமை டெஸ்ட் போட்டியின் போது தெரியவரும் என்று தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications