ஹிலாரியின் உதவியாளரானார் இந்திய அமெரிக்கர்
வாஷிங்டன்:
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், நியூயார்க் நகரஜனநாயக கட்சி எம்.பி.யுமான ஹிலாரி கிளிண்டனின், உதவியாளராகஅமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர் அனில் ககானி நியமிக்கப்பட்டுள்ளார்.
பட்ஜெட் கமிட்டியின் பொறுப்பாளராக ஹிலாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குஉதவியாளராக ககானி இருப்பார். ககானி வெள்ளை மாளிகையில் மூத்த நிர்வாகஅலுவலராக பணியாற்றியவர். அவர் அமெரிக்காவின் முன்னாள் முதல்பெண்மணியின் உதவியாளராக இந்த மாதம் 13-ம் தேதி பொறுப்பேற்கவிருக்கிறார்.
இது குறித்து ககானி நிருபர்களிடம் கூறுகையில், அமெரிக்காவின் முன்னாள் முதல்பெண்மணிக்கு உதவியாளராக பணிபுரியும் நாளை ஆவலுடன்எதிர்நோக்கியிருக்கிறேன். நான் பல முறை அவருடன் பேசி இருக்கிறேன் என்றார்.
ககானி வெள்ளை மாளிகை அலுவலக நிர்வாகியாக 1997-ம் ஆண்டு ஜுலை மாதம்சேர்ந்தார். 2000-மாவது ஆண்டு மார்ச் மாதம் அதிபர் கிளிண்டனின் தெற்கு ஆசியசுற்றுப்பயணத்தின் போது வெள்ளை மாளிகை பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
ககானியின் தந்தை பவாரிலால் ககானி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். அவர் ஐ.பி.எம்.நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றியவர். தற்போதுகலிபோர்னியாவில் உணவு பொருள் விநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார்.ககானியின் தாய் ஹேமலதா ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர். கணவருக்குஉதவியாக இருந்து வருகிறார்.
ககானி தனது இந்தியத் தொடர்புகள் குறித்துக் கூறுகையில், 15 முறைக்கும் அதிகமாகஇந்தியாவுக்கு சென்றிருக்கிறேன். ஹைதராபாத்தில் இருக்கும் குடும்பக் கட்டுப்பாடுமையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தேன் என கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications