இந்தியாவை வெல்வது கஷ்டம்தான் .. ஸ்டீவ் வாக்
மெல்போர்ன்:
இந்தியாவுடான கிரிக்கெட் தொடர் வெல்வதற்கு கடினமான ஒன்று என்றுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக விளையாடவிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஅறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புகழ் பெற்ற சுழற் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே,கோலின் மில்லர், மைக்கேல் காஸ்ப்ரோவிக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்னர்.
காஸ்ப்ரோவிக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ப்ரெட் லீ-க்கு பதிலாக விளையாடுகிறார்.பெர்த் நகரில் ஜிம்பாவேவுடன் விளையாடிய பந்தயத்தில் விளையாடும் போது லீ-க்குமுழங்கையில் அடிபட்டது. இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால்அணியில் இடம் பெறவில்லை.
அணியில் ஏற்கனவே மெக்ராத், ப்ளெமிங் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள்இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணி இந்த மாதம் 13-ம் தேதி இந்தியா வரவிருக்கிறது. முதல் டெஸ்ட்பந்தயம் இந்த மாதம் 27-ம் தேதி மும்பையில் துவங்குகிறது.
3 டெஸட் பந்தயங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் இரு அணிகளும்விளையாடுகின்றன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக் போட்டித் தொடர் குறித்துக்கூறுகையில்,
இந்தியாவுடன் விளையாட இருக்கும் போட்டி மிக முக்கியமானது. இந்திய அணிசிறந்த அணி. இந்திய அணியை வெல்வது எங்களுக்கு சவாலாக அமைந்துள்ளதுஎன்றார்.
ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 15 டெஸ்ட் போட்டிகளில் வென்று உலக சாதனைபடைத்துள்ளது. சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை 5-0 என்ற கணக்கில்வென்றது ஆனாலூம், 1969-ம் ஆண்டுக்கு பின் இந்தியாவை டெஸ்ட் தொடர் எதிலும்வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஸ்டீவ் வாக் (கேப்டன்), ஆடம் கில்கிறிஸ்ட்.(துணை கேப்டன்), டாமியன் ப்ளெம்மிங்,ஜாசன் கில்லஸ்பி, மாத்யூ ஹேடன், மைக்கேல் காஸ்ப்ரோவிக்ஸ், ஜஸ்டின் லாங்கர்,டாமியன் மார்ட்டின், க்ளென் மெக்ராத், கோலின் மில்லர், ரிக்கி பான்டிங், மைக்கேல்ஸ்லேட்டர், ஷேன் வார்னே, மார்க் வாக்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications