சோனியாவைச் சந்திக்கிறார் மூப்பனார்
டெல்லி:
அ.தி.மு.க.கூட்டணியில் பா.ம.க சேர்ந்துள்ளதால் அக்கூட்டணியில் நீடிப்பது குறித்துசோனியா காந்தியுடன் விவாதிக்க மூப்பனார் டெல்லி விரைகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் டெல்லியில் முகாமிட்டு மேலிடத்தலைவர்களானகுலாம் நபி ஆசாத், அனில் சாஸ்திரி ஆகியோருடன் தமிழக நிலை குறித்துவிவாதித்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்பரசு மற்றும் ராஜேசுவரன் தவிர மற்ற தலைவர்கள்அனைவரும், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களான பா.ம.க சேர்ந்துள்ள அ.தி.மு.க.கூட்டணியிலிருந்து விலகி மூன்றாவது அணி அமைத்து போட்டியிடுவதின் சாதகபாதகங்கள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது.
கூட்டத்திற்குப்பின் நிருபர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெள்ளியன்று சோனியா காந்தியை சந்தித்து தங்கள்கருத்துகளை தெரிவித்த பின் சோனியா காந்தி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம்என்றார்.
குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் பேசியபோது ஜெயலலிதாவுடன் உடனடியாக பேச்சுநடத்தும் திட்டமில்லை என்றார்.
இதனிடையே, டெல்லியிலிருந்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மூப்பனாருடன்தொடர்பு கொண்டு விடுத்த அழைப்பை ஏற்று ஜெயந்தி நடராஜன் எம்.பி.யுடன்டெல்லி சென்று, வெள்ளிக்கிழமை சோனியாவை சந்தித்து பேச உள்ளார் மூப்பனார்.
புதுவை காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் சண்முகம், எம்.ஓ.எச்.பாரூக் மரைக்காயர்,வி.நாரயணசாமி ஆகியோர் வியாழக்கிழமை சோனியா காந்தி, மற்றும் மேலிடத்தலைவர்களை சந்தித்து கூட்டணிகுறித்து விவாதித்தனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications