அரசு ஊழியர் 10-வது மாடியிலிருந்து குதித்து சாவு
டெல்லி:
டெல்லியில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணியாற்றி வந்த உதவியாளர், தனது அலுவலகத்தின்10-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
புதன்கிழமை காலை இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. அவரது பெயர் பிரபாகரன் (வயது 40). வெளியுறவுத் துறைஅமைச்சகத்தில் மனித ஆற்றல் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமைதான் தனதுபதவியை ராஜினாமா செய்திருந்தார் அவர்.
அவரது தற்கொலை குறித்து நியூடெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் எச்.பி.எஸ்.விர்க் கூறுகையில், தனதுராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு விட்டதா என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக பிரபாகரன் காலையில்அலுவலகத்திற்கு வந்திருந்தார். ஆனால் அவருக்கு யாரும் சரியாகப் பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து தனது அலுவலகம் அமைந்துள்ள சானக்கியபுரிக்குச் சென்று, அலுவலகத்தின் 10-வது மாடிக்குச்சென்றார். அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கீழே விழுந்த உடனேயே பிரபாகரன் இறந்து விட்டார். தற்கொலைக்கான காரணம் எதையும் அவர்குறிப்பிடவில்லை. சொந்தக் காரணங்களுக்காகவே அவர் இறந்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
1991-ம் ஆண்டு அவர் தனது மனைவியை விவாரத்து செய்தார். அப்போது முதலே மன நிலை சரியில்லாமல்இருந்து வந்தார். தனது ராஜினாமாக் கடிதத்திலும் கூட, தனக்கு மனநிலை சரியில்லாததாலும், வயதானபெற்றோரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாலும் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருந்தார் என்றார் விர்க்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications