சாய்பாபா உதவி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
புட்டப்பர்த்தியைச் சேர்ந்த சுவாமி ஸ்ரீ சத்யசாய்பாபா, குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 40 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பியுள்ளார்.
ஹைதராபாத்திலிருந்து புறப்பட்ட இந்த லாரிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த 40 லாரிகளில் நிவாரணப்பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் துணி மணிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
சாய்பாபா ஏற்கனவே 22 லாரிகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, கம்பளிகள், சுத்திக்கரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், வேட்டிகள் மற்றும் புடவைகள்ஆகியவற்றை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications