கலிபோர்னியா உதவுகிறது
சான்பிரான்சிஸ்கோ:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்காவின்கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்திய அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
குஜராத்துக்கு நிவாரணம் வழங்கும் கலிபோர்னியா கமிட்டித் தலைவர் அசோக் பட் நிருபர்களிடம் கூறியதாவது:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் மிகவும் மோசமான நிகழ்வாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக 6 மில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள மருந்துப்பொருட்கள், கம்பளிகள், அத்தியாவசிய உணவுப் பொட்டலங்கள் ஆகியவை கலிபோர்னியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா நகரிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் 60, 000 டாலர்கள் பெறுமானமுள்ள பொருட்கள் கொடுக்கப்பட்டன.சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஏர் இந்தியா ஜூம்போ ஜெட் விமானம் மூலம் நியுயார்க்கில் உள்ள கே.கே.எஃப். விமான நிலையத்திலிருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைப்பாளர் அபிஜித் ஹெல்டர் மேற்பார்வை செய்வார்.
சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பிஹா பாரகி படேல் என்பவரும், அவரது குடும்பத்தாரும் சேர்ந்து 25, 000 டாலர்கள் குஜராத் பூகம்ப நிவாரணநிதியாகக் கொடுத்துள்ளார்கள். சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள சீன வர்த்தக மையம் 10,000 டாலர்களைக் கொடுத்துள்ளது என்றார்.
குஜராத் மாநிலமும், கலிபோர்னியாவும் துறைமுக நடவடிக்கைகள், தொழில் நுட்பத் துறை ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டு வந்தது. இந்தியாவில்தொழில்துறையில் மிகவும் சிறந்து விளங்கும் மாநிலம் குஜராத். பொருளாதாரத்தில் கலிபோர்னியாவுடன் இவ்வளவு நாட்கள் வரை இணைந்துசெயல்பட்டு வந்தது. உலகிலேயே கலிபோர்னியா பொருளாதாரத்தில் 7 வது இடத்தில் இருக்கிறது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications