காலரா அபாயம் இல்லை
சுத்தூர் (கர்நாடகா):
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இடிபாடுகளுக்கிடையிலிருந்து சடலங்களை நீக்கும் பணி மிகவும் வேகமாக நடந்து வருவதால் அங்குகாலரா தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் சுத்தூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டது மிகவும் சோகமான விஷயமாகும். அங்கு இடிபாடுகளை அகற்றி சடலங்களை அடையாளம் கண் டுபிடித்து நீக்கும்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மீட்புப் பணியாளர்கள் நோய்க்கொல்லி மருந்துகளை இடிபாடுகளுக்கிடையில் தெளித்து வருகிறார்கள். இதனால் தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ராஜ்கோட், கட்ச், சுரேந்திரநகர் மற்றும் அகமதாபாத் மாவட்டங்களில் இடிபாடுகளுக்கிடையிலிருந்து சடலங்கள்முழுவதும் அகற்றப்படும்வரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று வரையறுத்துக் கூற முடியாது.
இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்காவிலிருந்து குடிநீரை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் பல கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால்பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படும். இதனால் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் இல்லை எனக்கூறலாம்.
இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் இடிபாடுகளை அகற்றும்பணி முடிவடைந்து விடும். இடிபாடுகளுக்கிடையில் இன்னும் பல பிணங்கள் உள்ளன. கட்ச்மாவட்டத்திலுள்ள பூஜ் மற்றும் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் தவிர எத்தனை கிராமங்கள் பூகம்பத்தால் முழுமையாகஅழிந்துள்ளது என்று இன்னும் கணக்கிடப்படவில்லை என்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications