கோடி கொடுத்த ஜெயின்கள்
மும்பை:
பிரபல அறக்கட்டளையான கே.பி.சாங்வி அறக்கட்டளை தங்களது உறுப்பினர்களான ஜெயின் சமுகமக்களிடமிருந்து ரூ 5.75 கோடி வசூல் செய்து, குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக்கொடுத்துள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் டாக்டர் ஷா கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாங்விஅறக்கட்டளை சார்பில் ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்திலுள்ள பாவபூரி திரிநாத் தாம் ஜெயின் கோவிலில்நிதிவசூல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அறக்கட்டளை டிரஸ்ட்டும், முன்னணி வைர வியாபாரியுமான பாபுபாய் சாங்வி ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.இவரது குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்கள். ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பிறஉறுப்பினர்கள், குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நன்கொடை அளித்தார்கள்.
இதுதவிர குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுக்கவும் அறக்கட்டளைதீர்மானித்துள்ளது என்றார்.
ஜெயின் மதத் தலைவர் ஆச்சாரிய ஸ்ரீ கலா பூரன் சூரிஸ்வராஜ் கூறுகையில், உலகம் முழுவதும் வசித்து வரும்ஜெயின் இன மக்கள் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாராளமாக நன்கொடை அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, சாங்வி அறக்கட்டளை, குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 5,000 பசுக்களைத்தத்தெடுத்து ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ள தங்களுக்குச் சொந்தமான கவ்ஷாலா வில் வளர்த்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications