ஓய்வூதியர்கள் நிதியுதவிபெங்களூர்:
பெங்களூர்:
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஓய்வூதியத்தை குஜராத்தில் பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதாக அவித்துள்ளனர்.
வியாழக்கிழமை மாலை திருமலை திருப்பதி தேவஸ்தான செயற்குழு அதிகாரி பி. கிருஷ்ணய்யா, ஓய்வுதியர்கள் நலவாழ்வுச் சங்கப் பிரதிநிதிகளுடன்பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான ஓய்வூதியர்களின் தங்களது ஒரு நாள் ஓய்வூதியத்தை குஜராத் பூகம்ப நிவாரணத்திற்குக்கொடுப்பதாகத் தெரிவித்தனர்.
மச்சிலிப்பட்டினத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ரூ 68,000 வசூல் செய்து கொடுத்தனர்.
பெங்களூரில் பல சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் பள்ளிகள் ரூ 32 லட்சம் நிதிவசூல் செய்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கொடுத்தன.பெங்களூர் கிளப் மற்றும் ஒக்கலிகர சங்கம் தலா ரூ 10 லட்சத்தை பூகம்ப நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
