தேறுகிறார் யோகி ராம்சுரத்குமார்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட விசிறி சாமியார் யோகி ராம்சுரத்குமார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்குசிகிச்சையளிக்கப்படுகிறது.
திருவண்ணாமலையிலுள்ள யோகி ராம்சுரத்குமார் டிரஸ்ட் அளித்த செய்திக்குறிப்பில், மிகுந்த ஆபத்தான கட்டத்தில் இருந்த யோகி ராம்சுரத்குமார்ஜெயகுருவுக்கு டாக்டர்கள் அளித்த சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சையால் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
யோகிக்கு வயதாகிவிட்டதால் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து விட்டன. இதனால் பாதிக்கப்பட்ட அவருக்காக பகவான் மீது பாரத்தைபோட்டு தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருவதாக டிரஸ்ட்டின் செய்திக்குறிப்பு கூறுகிறது.












Click it and Unblock the Notifications