8500 வங்கி ஊழியர்கள் ஓய்வு பெற விருப்பம்
கோவை:
விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் 8 ஆயிரத்து 500 ஊழியர்கள் ஓய்வு பெற விண்ணப்பங்கள் கொடுத்துள்ளனர் எனதிருப்பூரில் கனரா வங்கியின் நிர்வாக இயக்குநர் கே.என். ரெட்டி தெரிவித்தார்.
திருப்பூரில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வெளியேற கனரா வங்கி தனது ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்களைக்கோரியிருந்தது. இத்திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் பேருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற இதுவரை 8 ஆயிரத்து 500 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்குவிருப்ப ஓய்வு நிதியாக 720 கோடி ரூபாயிலிருந்து 750 கோடி ரூபாய் வரை அளிக்க வேண்டியிருக்கும்.
விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவோருக்கு 100 சதவீதம் ரொக்கமாக பணம் அளிக்கப்படும். மற்றவங்கிகளில் இவ்வாறு ஓய்வு பெறுவோருக்கு பாதி ரொக்கமாகவும், பாதி வைப்பு நிதிப் பத்திரமாகவும்வழங்கப்படுகிறது.
கனரா வங்கியை மற்ற வங்கியுடன் இணையும் வாய்ப்பு எதுவும் இல்லை. இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கம், கனராவங்கிக்கு நட்புரீதியான வங்கி என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கியுள்ளது.
கனரா பாங்க் வேளாண்மைக்காக இதுவரை 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. கல்விக்காக 125கோடி ரூபாய் கடனுதவி வழங்கியுள்ளது என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications