அதிமுக கூட்டணியில் த.மா.கா., காங். நீடிக்கும்?
சென்னை:அதிமுக கூட்டணியிலேயே நீடிக்க தமிழ் மாநில காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் பேசிய பிறகு, த.மா.க. தலைவர் மூப்பனாரும்,காஙகிரஸ் தலைவர் இளங்கோவனும் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி சமீபத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி, அதிமுக தலைமையிலானமதச்சார்பற்றக் கூட்டணியில் இணைந்தது. பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைப்புலிகள் ஆதரவுக் கட்சி என்பதால்,அதிமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸும், தமிழ் மாநில காங்கிரஸும் தர்மசங்கடமாக உணர்ந்தன.
இந்த நிலையில் சோனியா காந்தியின் ஆலோசனையப் பெறுவதற்காக மூப்பனாரும், இளங்கோவனும்தனித்தனியாக டெல்லி சென்றனர். இரு தலைவர்களும் சோனியாவுடன் சனிக்கிழமை தீவிர ஆலோசனைநடத்தினர். அதிமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது தனியாக வெளியேறி மூன்றாவது அணியை அமைப்பதாஎன்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
சட்டசபைத் தேர்தலில் தனியாக போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்தும் இவர்கள்ஆலோசித்ததாகத் தெரிகிறது. பேச்சு வார்த்தை முடிந்த பிறகு அதிமுக கூட்டணியிலேயே நீடிப்பது, மூன்றாவதுஅணி அமைப்பதில்லை என்று மூன்று தலைவர்களும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
த.மா.காவைப் பொறுத்தவரை திமுக அணியிலும் சேர்வதில்லை, மூன்றாவது அணியையும் அமைப்பதில்லைஎன்பதில் தெளிவாக இருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக கூட்டணியில், த.மா.கா. பெரிய கட்சியாக இருப்பதால் அக்கட்சிக்கு கூடுதலாக சட்டசபைத் தொகுதிகள்ஒதுக்கப்படும் என ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மூப்பனாருக்குத் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பா.ம.க. புதிதாக சேர்ந்துள்ளதன் மூலம் அதிமுக கூட்டணியில் புதிய மாற்றம் ஏதும் இருக்காது எனவும் த.மா.கா.வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தூதர் வருகிறார்:
இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும்அலுவலக நிர்வாகிகள் கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைவர்சோனியாவிடம் விடுவதற்கு ஒப்புதல் தருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சோனியா காந்தியின்தூதர் ஒருவர் இன்னும் 2, 3 நாட்களில் சென்னை வருகிறார். ஜெயலலிதாவுடன் கூட்டணி குறித்துப் பேசுவார்என்றார்.
பா.ம.க.வுடன் கொண்டுள்ள உடன்பாடு, கூட்டணி குறித்து அவர் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்துவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிச்சேரியில் எப்படி கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்தும் அப்போதுதெளிவாக பேசப்படும் என்று தெரிகிறது. பாண்டிச்சேரியில் ஆட்சியமைப்பதை பா.ம.க. தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது காங்கிரஸ் அங்கு ஆட்சியில் உள்ளது.
முன்னதாக, மூத்த காங்கிரஸ் தலைவர் பிரனாப் முகர்ஜி ஏற்கனவே சென்னை வந்து ஜெயலலிதாவுடன் ஒரு சுற்றுபேச்சவார்த்தையை முடித்துச் சென்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
த.மா.கா. முடிவு:
இதற்கிடையே, திங்கள்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை அக்கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக எதுவுமே அறிவிக்கப்படவில்லை. திங்கள்கிழமை இக்கட்சியின்நிலை தெரிய வரலாம். இந்த வார இறுதிக்குள் அதிமுக கூட்டணி குறித்த இறுதி வடிவம் தெளிவாகி விடும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications