அடுத்த குறி இமயமலை
சண்டிகர்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இமயமலைத் தொடரில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகஉள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் அந்தப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில், அதிக சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதால், பொருளாதாரம் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படும்என்று பூகம்பவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் அடுத்த பூகம்பம் 50 சதவீதம் இமயமலையின் கார்வால் பகுதியில் ஏற்படும்என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து குருஷேத்திரா பல்கலைக்கழக பூகம்பவியல் பேராசிரியர் கே.என்.காட்ரியும், டாக்டர் டியோடியாவும் கூறுகையில், இந்தியாவில் அடுத்தபூகம்பம் இமயமலைத் தொடரில் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.
இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள், அவர்களது உடைமைகள், பொருளாதாரம் ஆகியவற்றில் கடும் சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.இமயமலைத் தொடர் தவிர பசிபிக் பெருங்கடல் வளைவுகளிலும் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர் ஒருவர் கடந்த 200 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ளார்.
1819 ம் ஆண்டு குஜராத் மாநிலம் கட்ச், 1897 ம் ஆண்டு அசாம், 1905 ல் காங்க்ரா, 1934 ல் பிகார் மற்றும் நேபாளம், 1950 ம் ஆண்டு திபெத்மற்றும் அசாம் ஆகியவை. இவைகள் தவிர மிகவும் பெரிய நிலநடுக்கங்கள் 1988 ல் பிகார், 1991 ல் உத்தர்காஷி, 1999 ல் சாமோலி ஆகியஇடங்களில் பூகம்பம் ஏற்பட்டது என்று தெரிவிக்கின்றன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications