சிமென்ட் வரியை ரத்து செய்யுங்கள் .. கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிமென்ட் மீதான இறக்குமதி வரி மற்றும் பிற வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்,நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், பட்ஜெட் வரும் வரை மத்திய அரசு காத்திருக்கத் தேவையில்லை.உடனடியாக வரிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இதன் மூலம் சிமென்ட் விலை குறைய வாய்ப்புஉருவாகும்.
நாட்டிலுள்ள 5, 6 மிகப் பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து புதிய அமைப்பை உருவாக்கியுள்ளன.இவை சிமென்ட் விலையை ஏற்ற முடிவு செய்துள்ளன. அப்படி நடந்தால் உபயோகிப்பாளர்களுக்கு பெரியபாதிப்பு ஏற்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications