தடை விதித்தால் .. விடுதலைப் புலிகள் எச்சரிக்கை
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இங்கிலாந்து அரசு தடை விதித்தால், அமைதிப் பேச்சுவார்த்தையை தொடரமாட்டோம். அதற்கு முட்டுக்கட்டை போடுவோம் என்று விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு இங்கிலாந்து அரசு தடை விதிக்கும் வகையில் முயற்சிகள் நடப்பதாக செய்திகள்வந்துள்ளன. இதற்காக புதிதாக சட்டமும் கொண்டு வரப்படவுள்ளாக கூறப்படுகிறது. இதற்கு புலிகள் தரப்பில் கடும்எதிர்ப்பு எழுந்துள்ளது.
புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டால், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில், இலங்கையிலிருந்து வெளியாகும் சுடரொளி என்ற வாரப்பத்திரிகைக்கு விடுதலைப் புலிகளின்அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் அளித்துள்ள பேட்டியில் இங்கிலாந்து முயற்சியை குறை கூறியுள்ளார்.பாலசிங்கம் தனது பேட்டியில் கூறியுள்ளதாவது:
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இங்கிலாந்து அரசு தடை விதிக்கலாம் என்று செய்திகள் வருகின்றன. அப்படிநடந்தால் தற்போது நார்வே நாடு மேற்கொண்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை நாங்கள்தொடர மாட்டோம்.
இதுதொடர்பாக நார்வே தூதர் சொல்ஹீமிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவரது செல்வாக்கைப் பயன்படுத்திதடை முயற்சியை தடுக்கக் கோரியுள்ளோம்.
எங்களது இயக்கம் தடை செய்யப்பட்டால், நாங்கள் அமைதி முயற்சியில் தொடர்நது ஈடுபடுவது கடினம். அந்தஎண்ணத்தை நாங்கள் கைவிட நேரிடும் என்று கூறியுள்ளார் பாலசிங்கம்.
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளும், இலங்கை பிரதிநிதிகளும் ஐரோப்பிய நாடு ஒன்றில்பேச்சவார்த்தை மேற்கொள்ளலாம் என நார்வே யோசனை தெரிவித்துள்ளதாக ஒரு பத்திரிகையில் செய்திவெளியாகியுள்ளது.
முன்பு திம்பு, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் இரு தரப்புக்குமிடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது.ஆனால் எதுவுமே அமைதிக்கு வழி வகுக்கவில்லை. எனவே இந்த முறை, நார்வே, இங்கிலாந்து அல்லது பிரான்ஸ்ஆகிய நாடுகளில் ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நார்வே யோசனை தெரிவித்துள்ளதாகக்கூறப்பட்டுள்ளது.
இதற்கு இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்தநாடுகளின் தலைநகரங்களில் பேச்சுவார்த்தை நடத்தாமல், வேறு நகரங்களில் பேச்சுவார்த்தை நடத்துமாறும் அவர்நார்வே குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார். புலிகள் தரப்பில், இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.முதலில் சண்டை நிறுத்தம் என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளனர்.
நார்வே தூதுக் குழுத் தலைவர் சொல்ஹீம்,இந்த வாரம் இலங்கை வரவுள்ளார். அதற்குப் பிறகு புலிகளுக்கும்,இலங்கை அரசுககுமிடையே நேரடிப் பேச்சுவார்த்தை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications